அருவி செய்திகள்உலகம்பிரித்தானியா
லண்டனில் மூடிய அறைக்குள் நடந்தது என்ன? மகிழ்ச்சியுடன் புறப்பட்ட ஜெலன்ஸ்கி!

ஐரோப்பிய பாதுகாப்பு தொடர்பான மாநாடு ஒன்று பிரித்தானியாவில்(UK) நேற்று நடைபெற்றது.
ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும், நேட்டோவின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
உக்ரைனுக்குச் சமாதானத்தைக் கொண்டு வருவது, உக்ரேனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது- இவைகள்தான் அந்தச் சந்திப்பின் தலைப்புகளாக இருந்தன.
அந்தச் சந்திப்பின் போது- அமெரிக்கா இல்லாத ஐரோப்பியப் பாதுகாப்பு படைக்கட்டுமானம் ஒன்றை பலமாக நிறுவுவது பற்றிய கலந்துரையாடல்களும்- மூடிய அறைகளுக்குள் நடைபெற்றதாகவும் கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற மிகப் பெரிய குழப்பங்கள், அவமானப்படுத்தல்கள், பலவந்த வெளியேற்றம் போன்றனவற்றைத் தொடர்ந்து கள நிலவரம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி